Saturday, April 10, 2010
இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா
கங்கையில் மூழ்கி பாவங்களை கழுவியதாக பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். ப்ரீத்தி ஜிந்தா. இப்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி-20 போட்டியில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இவர், கடந்த வியாழக்கிழமை தனது தாயாருடன் திடீரென ஹரித்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 28-ஆம் தேதி முடிகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று, கங்கையில் புனித நீராடி வருகின்றனர். இதனால், அங்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அங்கு சென்ற ப்ரீத்தி ஜிந்தாவும், அவருடைய தாயாரும் கங்கையில் புனித நீராடினர். இந்த பயண அனுபவம் பற்றி தனது டிவிட்டர் வலைதளத்தில் ப்ரீத்தி ஜிந்தா எழுதி இருக்கிறார். ஹரித்வாருக்கு சென்றது பெரிய சாகசப் பயணமாக இருந்தது. அங்கு புனித கங்கையில் நீராடி எனது பாவங்களை கழுவினேன். ஹெலிகாப்டரில் பயணம் செய்தது மிகவும் வேடிக்கையாகவும், புதிய அனுபவமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.
Labels:
Preethi Zintha
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment